செய்திகள்

‘கேம் சேஞ்சர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மெகா பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவா் நடிகர் ராம் சரண். இவர் தற்போது புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

அதேசமயம் ராம்சரண், பிரசாந்த் நீல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் தனது அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் ராம்சரணு க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது.

மேலும் படத்தில் இருந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அதன்படி இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் புதிய அப்டேட் விரைவில் இது தொடர்பான புதிய அப்டேட் வெளியாகும் .

 

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி