தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோடூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள் குறித்தான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் இயக்குனர் ஸ்ரீநாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளா் ஜெ.மேகநாத் ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு சென்னையில் நடந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை தந்தது. கிராண்ட் மாஸ்டர் மற்றும் கேண்டிடேட் என இருப்பரிவுகளில் நடத்தப்படும் போட்டியில் மொத்த பரிசு தொகையாக 70 லட்சம் வழங்கப்பட உள்ளது . அதில் கிரேண்ட் மாஸ்டர் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு 15 லட்சமும், கேண்டிடேட் போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு 6 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது, வரும் 4ஆம் தேதி போட்டிக்கான தொடக்க விழா நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.
அதனைத் தொடர்ந்து பேசிய சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் இயக்குனர் ஸ்ரீநாத், சென்னையில் கடந்தாண்டு லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்றதால் தான், குகேஷ் கேண்டிடேட் சாம்பியன்ஷிப் செல்ல உதவியது. தற்போது இந்தியாவின் அர்ஜூன் எரிகேசி உலக செஸ் தரவரிசை பட்டியலில் முன்னேறி வருகிறார். நடைபெறவுள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியை அவர் வென்றால், அவரால் கேண்டிடேட் சாம்பியன்ஷிப் செல்ல முடியும்.
இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் நடைபெறவுள்ளது. சென்னை கிராண்ட்மாஸ்டர் சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளதாகவும், இப்போட்டியில் 8 இந்திய மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ் , எம். பிரனேஷ் மற்றும் ஆர் .வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
தொடர்ந்து பேசிய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு, செஸ் போட்டிகளில் சென்னை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இன்றும் வெளிநாட்டு வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். சென்னை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக வந்து கொண்டு உள்ளது. வெளியே போய் சென்று விளையாடாமல் சென்னையில் ஆடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி என தெரிவித்துள்ளாா்.
கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ….!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும்படி உள்ள கூட்டரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. இதில் 500 இருக்கைகள் பல செஸ் பயிற்சி மையங்களில் இருந்து வருங்கால வீரர்கள் வருவார்கள். மீதமுள்ள 500 இருக்கைகளில் மக்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாமெனவும், அதிகளவு கூட்டத்தை தவிர்க்க அதிகபட்சமாக ரூ.100 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்