ஓசூர் அருகே ஏரிக்குள் கார் கவிழ்ந்ததில் 25 வயது இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு .
கிருஷ்ணகிரி ஓசூர் அருகே ஏரிக்குள் கார் கவிழ்ந்ததில் 25 வயதான மகேஷ், லிண்டோ, யோகேஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர். அக்.30ம் தேதி இரவு ஓசூர் வெங்கடாபுரத்தில் இருந்து பாகலூர் நோக்கி மூவரும் காரில் சென்றனா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நேராக ஏரிக்குள் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மகேஷ், லிண்டோ இருவரும் பெங்களூரில் ஐடி நிறுவனத்திலும், யோகேஸ்வரன் தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தாா்கள் . தகவலறிந்தவுடன் வந்த பாகலூர் போலீஸார், கிரேன் உதவியுடன் காரை வெளியே எடுத்து காருக்குள் இருந்த மகேஷ், லிண்டோ ஆகியோரை சடலமாக மீட்கப்பட்டனா். யோகேஸ்வரனை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தாா்கள் நீண்ட தேடலுக்குப் பின்னா் அவரது உடல் மீட்கப்பட்டது. விபத்து குறித்து பாகலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றாா்கள் . எரியின் கரையில் தடுப்பு சுவா் இல்லாததால் அப்பகுதியில் இதேபோன்று நிறைய விபத்துகள் ஏற்படுவதாக கூறினா் எனவே, விபத்துகளை தடுக்க வெங்கடாபுரம் ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு.