நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று 2ம் கட்டமாக 13 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 54.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மக்களவை தேர்தலில் 2ம் கட்டமாக கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா 8, உத்தரபிரதேசம்8, மத்தியபிரதேசம்.6, மேற்கு வங்கம் 3, அசாம் 5, பீகார் 5, சத்தீஸ்கர் 3, ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மறைவால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1 மணி நிலவரப்படி 13 மாநிலங்களில் பதிவான வாக்குகளான, அசாமில் 46.31%, பீகார் 33.80%, சத்தீஸ்கர் 53..09%, ஜம்மு காஷ்மீர் 42.88%, கர்நாடகா 38.23% கேரளா 39.26% மத்தியபிரதேசம் 38.96%, மகாராஷ்டிரா 31.77%, மணிப்பூர் 54.26%, ராஜஸ்தான் 40.39%, திரிபுரா 54.47%, உ.பி 35.73% மேற்கு வங்கம் 31.25%, வாக்குகள் 1 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளன.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…