ஆம் ஆத்மியை அழிக்க அமலாக்கத்துறை முயற்சி செய்வதாக சிறப்பு நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில்- தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21- ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறையின் காவல் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, “ஆம் ஆத்மி கட்சியை அழித்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது. குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இன்றி நான் கைது செய்யப்பட்டுள்ளேன்; அமலாக்கத்துறை தன்னை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளட்டும்; அமலாக்கத்துறை தன் மீது தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று வாதிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!
அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…