ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை – மீட்புப் பணி தீவிரம்
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
குழந்தை உயிருடன் மீட்கப்பட கிராமத்தில் உள்ள கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் சாத்விக் என்ற 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
சாத்விக் அவரது தந்தை சதீஷ் நேற்று முன்தினம் தனது ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ஆழ்துளை கிணறை தோண்ட ஆரம்பித்தார். நேற்று முன்தினம் சுமார் 30 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட நிலையில் அதை மூடாமல் அவர்கள் அப்படியே விட்டு விட்டனர். நேற்று மாலை அதே ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து சிக்கிக் கொண்டுள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைக்கு முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர். குழந்தை சுமார் 15 முதல் 20 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஐந்து அடிக்கும் மேல் கடுமையான பாறைகள் இருப்பதால் நேராக குழந்தையை மீட்க செல்லாமல் பக்கவாட்டில் தோன்றி குழந்தையை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://www.mugavari.in/stalin-on-pm-modi/
இந்த பணி பன்னிரண்டு மணி நேரத்தை தாண்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.