தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 18) காலை 11.00 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்டவை என அனைத்தையும் வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. தகவல்களை வெளியிட்ட பின் எந்த தரவுகளும் விடுபடவில்லை என பிரமாணப் பத்திரத்தை வரும் மார்ச் 21- ஆம் தேதி மாலைக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், எஸ்பிஐ வழங்கும் தேர்தல் பத்திர தகவல்களை வலைத்தளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் தராத நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.