விசாகப்பட்டினத்திற்கு முதல்முறையாக வந்த சொகுசு கப்பல்
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு கப்பல் முனையத்தில் முதல்முறையாக வந்த கப்பலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
96 கோடி ரூபாய் செலவில் சொகுசு கப்பல் முனையம் கட்டப்பட்டுள்ளது. வணிகத்தை பெருக்கும் வகையில் பிரத்தியேகமாக சொகுசு கப்பலுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த முனையதிற்கு முதல் முறையாக சொகுசு கப்பல் ஒன்று வந்துள்ளது. The World என்ற அந்தக் கப்பலில் வந்த உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகளுக்கு அந்த முனையத்தின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரும் நகரம் என அழைக்கப்படும் கப்பல் தனித்தனி குடியிருப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 281 பேர் அந்த சொகுசு கப்பலில் பணியாற்றுகின்றனர்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/cm-stalin-tweet-5/2242
சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று அந்த கப்பல் அந்தமான், சிங்கப்பூர் வழியாக மலேசியா சென்று பின்னர் தாய்லாந்து, கம்போடியாவுக்கு செல்ல உள்ளது.