இன்று காலை தொடங்கிய ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 25ஆம் தேதியும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.இதில் 50 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீரில் 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் கட்ட தேர்தலில் 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 415 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், சுமார் 39 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து, வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.