மக்களவை தேர்தலில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதை அடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் 2ம் கட்டமாக கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா 8, உத்தரபிரதேசம்8, மத்தியபிரதேசம்.6, மேற்கு வங்கம் 3, அசாம் 5, பீகார் 5, சத்தீஸ்கர் 3, ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 3 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அசாமில் 60.32%, பீகாரில் 44.24%, சத்தீஸ்கரில் 63.92%, ஜம்மு காஷ்மீர் – 57.76% , கர்நாடகா – 50.93%, கேரளா – 51.64%, மத்தியப்பிரதேசம் – 46.50%, மகாராஷ்டிரா – 43.01%, மணிப்பூர் – 68.48%, ராஜஸ்தான் – 50.27%, திரிபுரா – 68.92%, உத்திரபிரதேசம் 44.13%, மேற்கு வங்கம் – 60.60%வாக்குகள் பதிவாகியுள்ளது.