நடப்பாண்டியில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
‘ஜூலை 13- ல் குரூப் 1 தேர்வு நடைபெறும்’ என அறிவிப்பு!
நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான கோடை வெப்பத்திற்கு தயாராகுங்கள் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, இந்தாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் வெப்ப அலைகளுடன் இயல்பை விட அதிகமான வெப்ப நிலை நிலவும் என தெரிவித்துள்ளது.
கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மதியம் 12.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை அணிதல், வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது தொப்பி, காலணிகளை பயன்படுத்த வேண்டும், மதுபானம், காப்பி, தேநீர் மற்றும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ அனுமதிக்கக் கூடாது, உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
இதுதவிர அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வசதிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், கோடைக்காலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓஆர்எஸ் கரைசல், குடிநீர் போன்றவற்றை வைத்திருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…