தெலங்கானா ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அனுப்பியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை அல்லது புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!
கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் தோல்வி அடைந்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் 01- ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 16- ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது.