இந்தியா

தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நேரில் அழைத்து பாராட்டு

புதுடெல்லி – ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர் , வீராங்கனைகளை நேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். வீரர்களுடன் கைகுளுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு அதைத் தக்க வைத்திருக்கிறது. இந்த போட்யில் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, குகேஷ் டி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் தனி நபர் ஆட்டத்துக்கு தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில் வெற்றிபெற்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் வீரர்களுடன் கலந்துரையாடினார். மேலும் இளம் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகாய்சி இருவரும் செஸ் விளையாட அதை உற்சாகத்துடன் பிரதமர் ரசித்தார்.

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி