அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் திகார் சிறைக்கு அனுப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21- ஆம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒருவாரம் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.
அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டால் திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயந்த் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1,403 பேர் வேட்பு மனுத்தாக்கல்!
காவலில் இருந்தபடி முதலமைச்சர் பணியைத் தொடங்கும் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…