கேரளாவில் காணாமல் போன இரண்டு 16 வயது சிறுமிகளை சேலம் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
சேலம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட இரண்டு கேரள மாநில சிறுமிகளையும் சேலம் குழந்தைகள் நல உதவி அலுவலக அதிகாரிகள் உதவியுடன் ரயில்வே போலீசார் பெற்றோருடன் சேர்த்து வைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் இருந்து அசாம் மாநில சிறுமிகள் ஆசாமி மொழி மட்டும் பேசக்கூடிய இரு பிள்ளைகள் தனது பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு அசாம் செல்வதற்காக ரயிலில் பயணித்துள்ளனர். இது தொடர்பான புகார் ரயில்வே போலீசாருக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் எர்ணாகுளம் முதல் பெங்களூரு பானஸ்வாடி வரை செல்லும் ரயிலில் சிறுமிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என சேலம் ரயில்வே போலீசாருக்கு கேரளம் ரயில்வே போலீசார் கொடுத்த தகவல் மற்றும் புகைப்படங்கள் அடிப்படையாக வைத்துக் கொண்டு சேலம் ரயில்வே போலீசார் கேரள மாநில சிறுமியை மீட்பதற்கு முழு வீச்சுடன் சேலம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
இதனை அடுத்து எர்ணாகுளம் முதல் பெங்களூர் பானஸ்வாடி வரை செல்லும் விரைவு ரயில் 5 ஆவது நடைமேடைக்கு வந்தது .ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி குறிப்பிட்ட சிறுமிகளை தீவிரமாக தேடினர். சிறுமிகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளில் சிறுமிகளை தேடுவதை விட்டுவிட்டு நடைமேடையில் தேட தொடங்கியுள்ளனர். ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் நடைமேடையில் இருந்து ரயில்வே நிலையத்தை விட்டு வெளியே சென்றார்கள்.
ஆனால் இரண்டு சிறுமிகள் மட்டும் போலீசார் சந்தேகம் படும் வகையில் நின்றிருந்தனர். அவர்கள் இருவரும் மலையாளத்தில் பேசியதை அடுத்து ஏற்கனவே சிறுமிகளை தேடும் வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் குறிப்பிட்ட இரண்டு சிறுமிகளிடம் விசாரணை செய்தனர்.
அப்பொழுது அவர்கள் பெற்றோரிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய விவரத்தை போலீசாரிடம் கூறியுள்ளனர். மேலும் படிப்பதை காட்டிலும் வேலைக்கு செல்வதில் இருவரும் ஆர்வம் காட்டியதகவும் ஆனால் சிறுமிகளின் பெற்றோர்கள் படிக்கச் சொல்லி கண்டித்தாதகவும் இதனால் தனது பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியது குறித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகள் இருவரிடமும் விசாரித்த நிலையில் அவர்கள் கூறிய விவரங்களை வைத்து சிறுமிகள் கூறிய முகவரி உட்பட்ட கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாலிக்கல் காவல் நிலையத்தில் சிறுமிகள் இருவர் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கேரளம் போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து கேரள ரயில்வே போலீஸ் தகவல் கூறிய காணாமல் போன சிறுமிகள் என்பதை சேலம் ரயில்வே போலீசார் உறுதி செய்தனர்.
பின்பு இரவு 12 மணி ஆன நிலையில் சிறுமிகளின் பாதுகாப்பு கருதி இருவரையும் ரயில்வே பெண் காவலர் தலைமையில் சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல உதவி மைய அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது
இதனை அடுத்து காலை விடிந்ததும் சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து சேலம் வரவழைத்தனர். மேலும் கேரளம் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் உடன் வந்திருந்தனர். கேரளா போலீசார் முன்னிலையில் சிறுமிகளை பெற்றோரிடம் சேலம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.