தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து நடிக்க தொடங்கியவர். அந்த வகையில் கமல்ஹாசன், ரஜினி என பல பெரிய ஹீரோக்களுடன் நடித்து பெயர் பெற்றுள்ளார்.
அதிலும் குறிப்பாக அம்மனாக, நீலாம்பரியாக, ஜெயலலிதாவாக நடித்து மிரட்டி இருந்தார். அடுத்தது பாகுபலி திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானது. இவர் தற்போது பல படங்களை குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இதற்கிடையில் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளாா். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
இது தொடர்பாக ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி தரப்பில் கூறப்பட்டதாவது, தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் இருப்பதாகவும் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தான் பலரும் தவறாக புரிந்து கொண்டு நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ரம்யா கிருஷ்ணன் – கிருஷ்ண வம்சி தம்பதிகள் பிரிந்து வாழ்வது தொடர்பான தகவலில் உண்மை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…