லைஃப்ஸ்டைல்

இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினம் – இன்றும் இன்று முதலும் நீங்கள் செய்ய வேண்டியவை:

நீரிழிவு நோய் என்பது இன்று வயதானவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோரையும் பாதிக்கிறது.

மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் உண்டாகக்கூடும். மேலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து விடுகிறது. தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இருக்கலாம். அதேசமயம் போதுமான அளவு தூக்கம் வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

மேலும் உலக நீரிழிவு தினமான இன்றும் இன்று முதலும் நீங்கள் செய்ய வேண்டியவை:
காலை உணவை தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடும் போது நான்கு இட்லி சாப்பிடும் நேரத்தில் இரண்டு இட்லியும் இரண்டு வடையும் சாப்பிட்டால் நல்லது. நாம் முதலில் புரோட்டின் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதி வயிறு நிரப்பி விடும். அதன் பின்னர் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டையே நம் உடல் எடுத்துக்கொள்ளும். இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கலாம்.அடுத்தபடியாக நன்கு பசித்த பின் உண்ண வேண்டும். ஒருவேளை உணவிற்கும், மற்றொரு வேலை உணவிற்கும் இடையில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இதன் மூலம் செரிமான தன்மை மேம்படுத்தப்படும்.

அடுத்தது முக்கியமான ஒன்று, நீரிழிவு நோய் உடையவர்கள் வருடா வருடம் கண்களை பரிசோதித்தல் நல்லது. அதாவது மற்றவர்களை விட நீரிழிவு நோய் உடையவர்கள் கண்களை கவனமாக பாதுகாப்பது அவசியம். ஏனென்றால் நீரிழிவு நோயினால் ரெட்டினோபதி என்று சொல்லப்படும் கண் சம்பந்தமான பிரச்சனை, குருட்டுத்தன்மை போன்றவைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.உலக நீரிழிவு தினம்….. நீங்கள் செய்ய எனவே உலக நீரிழிவு தினமான இன்று உங்கள் கண்களைப் பரிசோதனை செய்வது நல்லது. இனிவரும் நாட்களிலும் மேற்கண்ட குறிப்புகளை கவனத்தில் வைத்து அதனை பின்பற்றுவது மிகவும் சிறந்தது.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுக .வேண்டியது அவசியம்.

Newsdesk

Recent Posts

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…

நவம்பர் 20, 2024 9:59 காலை