காதலனுக்கு உண்மையாக இருந்தேன் என்னை ஏமாற்றி விட்டான் இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோ பதிவிட்டு திருநங்கை தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக திருநங்கை லைவில் வீடியோ பதிவிட்ட போது பாய் சொல்லி அனுப்பிய இன்ஸ்டாகிராம் நண்பர்கள்.
மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், பஜனை கோயில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் இசை(என்ற) சரன்(24), திருநங்கையான இவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த கரன்(21), என்பவருடன் காதல் வயப்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கரனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கையான இசையை விட்டு பிரிந்து சென்று விட்டார்.இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இசை நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் மது போதையில் இருந்தபடி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டதும் அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பாக்கமாக சாத்தப்பட்டு இருந்தது இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திருநங்கையான இசை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தனது காதலன் கரன் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஏக்கத்தில் சமூகவலைதள பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம் – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.
திருநங்கை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில் காதலனுக்கு தான் உண்மையாக இருந்ததாகவும் ஆனால் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார் மேலும் நான் இறந்த பிறகு இறப்பிற்கு காரணமானவர்களை நண்பர்கள் யாரும் விடக்கூடாது என தெரிவித்துள்ளார். அதேபோல் மது அருந்தி கொண்டிருந்த திருநங்கை தான் கடைசி ரவுண்டு முடிந்தவுடன் அருகே உள்ள அறையில் தூக்கில் தொங்குவதாக இன்ஸ்டாகிராமில் லைவில் பேசி பதிவிட்டு இருந்தார் அப்போது கமெண்டில் வந்த இன்ஸ்டாகிராம் நண்பர்கள் சரக்கு என்ன பிராண்ட் என கேட்டதோடு கடைசியாக பாய் சொல்லி அனுப்பி வைத்தனர்..