கரூர்,பள்ளபட்டியில் கனமழை காரணமாக பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்து சிறுவனின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் இப்பொழுது பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. சாலை எங்கும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு செல்லும் ஏராளமான மாணவ மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு லேட்டஸ்ட் அப்டேட்!
இந்த நிலையில் பள்ளப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் 7-ஆம் வகுப்பு பயின்று வரும் முகமது உஸ்மான் (12 வயது) சிறுவன் மிதிவண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது அரசு மருத்துவமனை அருகே எதிர்பாராத விதமாக சிறுவன் கழிவு நீர் வடிகாலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.