செய்திகள்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் ‘PHOENIX’ – ரிலீஸ் டேட் அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் PHOENIX படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் வாரிசு நடிகர்கள் பலர் திரைத்துறையில் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் நடிகர்களாக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருபவர்களும் உண்டு. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். அதாவது ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் PHOENIX – வீழான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் ஷாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

பின்னர் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன் போஸ்டர் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி