செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் போட்டோ எடுக்கும் அஜித் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதை அடுத்து நடிகர் அஜித் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி ஏறத்தாழ இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் நடிகர் அஜித் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அஜித்தின் 63வது படமான இந்த படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கார், பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்வார். அதன்படி சமீபத்தில் நடிகர் அஜித் பைக் ஓட்டும் வீடியோ, காரில் பறக்கும் வீடியோ என அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் படப்பிடிப்பு தளத்தில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் அஜித், நடிகர் ஆரவ் – ஐ புகைப்படம் எடுக்கிறார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி