அதிமுக-வால் டீ கூட வாங்கித்தர முடியாது – நடிகை ராதிகா பேச்சு
அதிமுக-வால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடியாது, வீட்டில் தான் குரல் எழுப்ப முடியும் – அவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது, டீ கூட வாங்கித்தர முடியாது – தேர்தல்பிரசாரத்தில் நடிகை ராதிகா பேச்சு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.பி.நத்தம் கிராமத்தில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா, இன்று தனது தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கினார். அப்போது அவர் பேசுகையில்,
https://www.mugavari.in/news/sports/rcbvssrh-today-ipl-match/1030
அதிமுக கூட்டணி மத்தியிலும் கிடையாது, மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ளனர். ஆகையால் அவர்களால் எந்த நன்மையும் மக்களுக்கு செய்ய முடியாது. இவர்கள் எங்கே போய் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது? அவரவர்கள் வீட்டில் தான் குரல் கொடுக்க முடியும். இவர்களால் மக்களுக்கு ஒரு டீ கூட வாங்கித் தர முடியாது. அவர்கள் மக்களை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா அதிமுக மீது சரமாரி குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரப்பெருமாள்புரம், உலகாணி, மேல உப்பிலிக் குண்டு, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…