அரசியல்

பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!

பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!

பாஜக வரும் மக்களவை தேர்தலில் 400 இடங்களை பிடிப்போம் என்று பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் தேர்தல் தேதி நெருங்க நெருங்க வடமாநிலத்தில் இருந்து வரும் தகவல்கள் பாஜக பிரமுகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் படியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க படாதபாடுபட்டு இறுதியில் தோல்வியில் முடிந்தது. அதேபோன்று ஒரிசாவில் பிஜூ பட்நாயக் கட்சியுடன் கூட்டணி அமைக்க கடும் முயற்சி செய்தனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.

இப்படி நாடு முழுவதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு முக்கிய கட்சிகள் எதுவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. பாஜக இதுபோன்ற பின்னடைவை சந்திப்பதற்கு காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார், மகாராஷ்டிரா , கோவா என்று விரல் விட்டு எண்ணக் கூடிய மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருக்கிறது. நாட்டில் மொத்தம் 4139 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 1526 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

https://www.mugavari.in/congress-candidate-from-tiruvallur-to-get-10-lakh/

66 சதவீதம் சட்டமன்ற தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பொழுது பாஜகவிற்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது. உத்தவ்தாக்கரே, சரத்பவார், ராகுல்காந்தி கூட்டணி வலுவாக இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால் டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான அலை வீசத்தொடங்கியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் திறந்தப் பின்னரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு சாதகமான சூழல் இல்லை. அகிலேஷ் யாதவ் தலைமையில் உள்ள சமாஜ்வாடி பார்ட்டியும் காங்கிரஸ் கட்சியும் தாராள மனப்பான்மையுடன் விட்டு கொடுத்து கூட்டணி அமைத்துள்ளனர். அதனால் பாஜக மாயாவதியுடன் ரகசிய கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சியை தனியாக போட்டியிட வைத்து சிறுபான்மை வாக்குகளையும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளையும் இண்டியா கூட்டணிக்கு செல்லாமல் தடுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகிறது.

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறி வருகிறது. அந்த மாநிலத்தில் நிதிஷ்குமார் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். குஜராத் மாநிலத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகி வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

அமலாக்கத்துறை வைத்து தமிழ்நாடு, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடத்திய ரெய்டுகளினால் மக்கள் அதிர்ப்தி அடைந்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நடுநிலை வாக்காளர்கள் பாஜகவிற்கு எதிராக சிந்திக்க தொடங்கியுள்ளனர். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அமலாக்கத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு அவருக்கு ஆதரவான அலை வீசத்தொடங்கியுள்ளது.

இப்படி நாடு முழுவதும் கடும் நெருக்கடியில் இருக்கும் பாஜக வினர், தேர்தலுக்கு பின்னர் வெற்றிப் பெறும் மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைக்க இப்பொழுதே காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி