குடுகுடுப்பைகாரர் வேடத்தில் திமுக பேச்சாளர் பிரச்சாரம்
எடப்பாடி நகர பகுதியில் திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடுகுடுப்பை அடித்து கோணங்கி வேடத்தில் குறி சொல்லி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தான் சேலம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறி வீதி வீதியாக சென்று திமுகவிற்கு வாக்கு சேகரித்தார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார்.
https://www.mugavari.in/march-month-metro-passengers/
இதனைத் தொடர்ந்து திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் எடப்பாடி நகர பகுதிகளில் குடுகுடுப்பை அடித்து கோணங்கி வேடத்தில் நாடும் நான் நாட்டு மக்களும் நலமாக வாழ முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பொய் பேசி வரும் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் இனி நம்பாதீர்கள் எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தான் சேலம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் எனவும் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் குறி சொல்லி வினோதமான முறையில் வாக்கு சேகரித்தார்.
அப்போது எடப்பாடி நகர்மன்ற தலைவர் பாஷா உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.