தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். இப்பள்ளி ஆய்வின் போது தானாக முன்வந்து காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய பள்ளி மாணவர்!
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 233ஆவது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவி அவர்களின் அரக்கோணம் தொகுதியில் மேற்கொண்டார். அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
இப்பள்ளி மாணவர்களின் திறமைகள் வியக்க வைப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளியில் காலியாக உள்ள இடத்தை தூய்மை செய்து வைக்கும்படி அறிவுறுத்தினார். தூய்மை செய்தால் மாணவர்கள் விளையாடுவதற்கு உதவியாக இருக்குமென தெரிவித்தார். தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இப்பள்ளி ஆய்வின் போது காலை உணவுத் திட்டம் குறித்து தானாக முன்வந்து பேசிய மாணவரையும், கலைத்திருவிழா போட்டிக்காக வேடமணிந்து திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். சிறப்புக் குழந்தை மாணவர் பரத்தின் ஓவியத் திறமையைக் கண்டு பாராட்டுகள் தெரிவித்தார்.
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…
அரசு பள்ளி விடுதி காப்பாளர் பணியிடங்கள் அரசின் புதிய அறிவிப்பு தமிழகம் முழுவதும் 1300க்கும் அரசு பள்ளி விடுதிகள் உள்ளன.…