தமிழ்நாட்டில் “இந்தியா” கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் நடத்தியுள்ள புதிய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளது.
இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அந்த கருத்து கணிப்பின் மூலம் உறுதியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 52 சதவீத வாக்குகளையும் அதிமுக கூட்டணி 23 சதவீத வாக்குகளையும் பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெறும் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் எனவும் கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் பட்சத்தில் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக இடம்பெற கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கேரளாவில் இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் கைப்பற்றும் என்ற ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது எனவும் கருத்து கணிப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
https://www.mugavari.in/news/sports/mivscsk-ipl-match/1019
அதன்படி அங்கு இந்தியா கூட்டணி 43.4 சதவீத வாக்குகளையும் பாஜக கூட்டணி 21.2% வாக்குகளையும் பெரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.