தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை – அமலாக்கத்துறை உறுதி அளித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை வருமான வரி தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை

கடந்த பல்வேறு கால கட்டங்களில் (நிதி ஆண்டுகளில்) வருமானவரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை 1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சம்மன்களை வருமான வரித்துறை அனுப்பியுள்ள நிலையில், வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நீதிபதி பி.வி. நாகரத்தினா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Congress Party

அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே வருமானவரித்துறை இரண்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், மூன்றாவது நோட்டீஸ் அண்மையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மக்களவைத் தேர்தல் நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது என நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டி வாதிட்டார்.

அப்போது வருமானவரித்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, மக்களவைத் தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 1,700 கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்க வருமானவரித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது என உறுதியளித்தார்.

https://www.mugavari.in/today-weather-report/

வருமானவரித் துறை முடிவுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பு வழக்கறிஞர் ஆச்சரியம் தெரிவித்த நிலையில், எப்போதும் எதிர் தரப்பை எதிர்மறையாக நினைக்க கூடாது என நீதிபதிகள் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள் வருமானவரித்துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எந்த ஒரு பாதகமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என அமலாக் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Video thumbnail
மாணவர்களின் எதிர்காலம் பாழ் | இந்திய கல்வி முறை சூரையாடப்படுகிறது | பகீர் கிளப்பும் சோனியா காந்தி
10:45
Video thumbnail
RSS திட்டம் அம்பலம் | தவெக பொதுக்குழுவில் நடந்தது என்ன | TVK | DMK | MK Stalin | Modi | BJP
11:46
Video thumbnail
2026 தேர்தல் களம் | அதிமுக, பாஜக, பாமக கூட்டணி உறுதி | ADMK | BJP | PMK | EPS | Modi | Ramadoss
10:36
Video thumbnail
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து | EPS | Amit Shah | ADMK
10:20
Video thumbnail
வட மாநிலங்களின் தலைவர்களை கதறவிட்ட முதல்வர் | நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை ராகுல் காந்தியின் மர்மம்
09:45
Video thumbnail
4 மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம்- அடுத்தது தெலுங்கானா - கொளுத்திப் போட்ட ஸ்டாலின் |MK Stalin
08:49
Video thumbnail
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை | சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுப்பாரா? | Chandrababu Naidu | MK Stalin
10:14
Video thumbnail
முதல்வர் A1; ஆணவத்தின் உச்சம் பாஜக தலைவர்களின் பேச்சு | MK Stalin | Annamalai | H Raja | BJP | DMK
10:12
Video thumbnail
முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா? | நல்லிணக்கத்தை பாழ்படுத்தும் பாஜக | MK Stalin | BJP
07:37
Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img