” பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை ” – ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கை இல்லை என்பதாலேயே பிரதமர் நரேந்திர மோடி அவர்களது தேர்தல் அறிக்கையை பற்றிய பேசுவதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நாட்டின் வளங்களில் பட்டியலினத்தோர், ஓபிசி மற்றும் ஏழைகளுக்கு முதல் உரிமை உள்ளது என்று மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் பிரதமர் மோடி பேசி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
Speaking at Solapur, Maharashtra, the Hon'ble prime minister said that SC, ST, OBC and the poor have the first right on the country's resources
PM Manmohan Singh said the same thing in his speech to the National Development Council in November 2006
Dr Manmohan Singh had added…
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2024
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சி கவுன்சிலில் ஆற்றிய உரையிலும் இதையே கூறியதாக குறிப்பிட்டுள்ள சிதம்பரம் ஆனால் அந்த பட்டியலில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மன்மோகன் சிங் சேர்த்திருந்ததாக கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஏன் சிறுபான்மையினர், பெண்கள் குழந்தைகளை மறந்து விட்டார் என கேள்வி எழுப்பியிருக்கும் ப.சிதம்பரம் நாட்டில் ஏழை சிறுபான்மையினர், ஏழைப் பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகளே இல்லையா என்று விலகி உள்ளார்.
தேசத்தின் வளங்களின் மீது ஏழைகளுக்கு முதல் உரிமை உண்டு என்பதுதான் சரியான உருவாக்கம் என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். நாடு வளர்ச்சி அடைந்தாலும் கணிசமான எண்ணிக்கையில் ஏழைகள் இருப்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதால் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏழைகளை உயர்த்தவும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்தியாவில் உள்ள ஆபத்தான ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வேலை, வளம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எனவும் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என்பதாலேயே பிரதமர் மோடியும் பிற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையை பற்றி பேசுவதில்லை என அவர் கூறி உள்ளார்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/today-gold-rate-14/2304
பாஜகவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் மறைந்து விட்டதாகவும் ஆனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தி இருப்பதுடன் கோடிக்கணக்கான மக்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளதாகவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.