அரசியல்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் – நீதிபதிகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் – நீதிபதிகள்

முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது கைது சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கெஜ்ரிவால்.

வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தான் கைது செய்யப்பட்டு இருப்பது சட்ட விரோதம் எனவும், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றும் தான் ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்றும் கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை அதிக காலம் பிடிக்கும் என்பதால் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வழக்கினை மே 7ம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் இரு தரப்பும் வாதங்களை முன் வைப்பதற்கு தயாராக இருக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, வழக்கில் வாதங்கள் விரைவில் முடிவடையவில்லை என்றால் இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெளிவுபடுத்திய நீதிபதிகள், இடைக்கால ஜாமின் வழங்கப்படுமா? வழங்கப்படாதா? என்பது குறித்து நீதிமன்றம் எந்த கருத்தும் கூறவில்லை.

ஆனால் வழக்கின் வாதங்கள் நிறைவடைவதில் கூடுதல் காலம் எடுத்துக் கொண்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி ஆலோசிக்கலாம் என்பதையே நீதிமன்றம் கூறியுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள் வழக்கை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தனர். மே 7ம் தேதி விசாரணையின் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணமாக ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி