ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங்க்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம்
மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி பிரமுகருக்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சஞ்சய் சிங்குக்கு எதிராக அப்ரூவராக மாறியவரின் வாக்குமூலத்தை தவிர எதிராக எந்த ஆதாரமும் இல்லை என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதங்களை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில் எம்.பி.சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.
நாளை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யாமல் எந்த ஒரு ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக அமலாக்கத்துறை சிறையில் அடைத்திருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சிங் ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை முன் வைத்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் இது குறித்து நாளைவரை கால அவகாசம் கூறிய அமலாக்க துறையினுடைய அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
https://www.mugavari.in/tamilnadu-weather-report-2/
எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக ஈடி சிறையில் அடைத்து வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கோரிய வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…