கடப்பா தொகுதியில் ஒய்.எஸ் ஷர்மிளா போட்டி
ஆந்திராவில் அப்பா எம்.பி. யான தொகுதியில் மகளும் போட்டியிடுவதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா ரெட்டி – தந்தை ஒய்.எஸ் ஆர் நான்கு முறை எம்.பியாக வெற்றி பெற்ற தொகுதியில் மகளும் போட்டியிடுவதால் அதிக கவனம் ஈர்த்துள்ளது கடப்பா தொகுதி.
காங்கிரஸ் கட்சி ஆந்திர பிரதேசம், பிகார், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான 17 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், 175 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 114 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநிலத்திற்கு 49 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல் என 3 பட்டியல்களை இன்று அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அதில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கடப்பா மக்களவைத் தொகுதியில் இருந்து ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத் தேர்தலுக்கு முன்பு அவரது கட்சியான ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ் சர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டார். இதனிடையே 2024 மக்களவை தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி ஒய்.எஸ் ஷர்மிளாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
https://www.mugavari.in/ramadoss-request-to-cadres/
ஆந்திரபிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ் சர்மிளா, அவரது தந்தையான ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி 4 முறை நாடாளுமன்ற எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடப்பா தொகுதியில் இம்முறை போட்டியிடுவது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…