செய்திகள்

இலங்கை சிறையிலிருந்த 17 மீனவர்களை மீட்டு ; சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு நடவடிக்கை.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, 17 ராமேஸ்வரம் மீனவர்கள், ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த, வாகனங்களில், சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி, 17 மீனவர்கள் விசைப்படகுகளில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி, 17 மீனவர்களையும் கைது செய்தனர்.அதோடு படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, 17 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

அவா் அடுத்து இலங்கையில் உள்ள, இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள், 17 பேரையும் தங்கள் பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். அதன்பின்பு 17 மீனவர்களுக்கும், பாஸ்போர்ட்கள் இல்லாத காரணத்தால், அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். அதோடு மீனவர்களை இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்புவதற்காக, இந்திய தூதரக அதிகாரிகள், விமான டிக்கெட் களும் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வரும், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 17 ராமேஸ்வரம் மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 17 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம், அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி