செய்திகள்

‘கங்குவா’ சப்ரைஸ் பற்றி சொன்ன – சிறுத்தை சிவா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் சிறுத்தை சிவா, சிறுத்தை, வேதாளம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அடுத்தது இவர் சூர்யாவுடன் கைகோர்த்து கங்குவா எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது.

எனவே ரசிகர்கள் பலரும் படத்தினை திரையரங்குகளில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதேசமயம் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேன்மேலும் தூண்டி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் கார்த்தி இணைந்துள்ளதாகவும் கார்த்திதான் சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா, இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், “கங்குவா படத்தின் கதையை சீன் பை சீனாக சொல்லும் போது அவரது முகத்தில் உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இன்டர்வெல் சீன் முடித்த பிறகு இதுவரை இந்த மாதிரி விஷயங்களை பார்க்கவில்லை சிவா என்று சொன்னார் சூர்யா. சூர்யா சாருக்கு இது ரொம்ப பிடித்து விட்டது என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. படத்தின் பூஜை போட்டதிலிருந்து இப்போது படத்தின் பைனல் காப்பியை பார்த்த பிறகு சூர்யா சார் எங்கள் குழுவின் மீது வைத்திருந்த நம்பிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது. அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி