செய்திகள்

ஜீவா நடிப்பில் ‘சிவா மனசுல சக்தி 2’ எம். ராஜேஷ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் எம். ராஜேஷ் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் எம் ராஜேஷ், சிவா மனசுல சக்தி 2 படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் எம்.ராஜேஷ்.

இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்த அனுயா, ஊர்வசி, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் ஜீவா மற்றும் சந்தானம் ஆகிய இருவரின் காமெடிகளும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய எம். ராஜேஷ், சிவா மனசுல சக்தி 2 படம் குறித்து ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த படம் பக்கா கமர்சியல் என்டர்டெயினர் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தினை நடிகர் ஜீவா தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி