நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பத்து தல படத்திற்கு பிறகு கமல்ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அதேசமயம் நடிகர் சிம்பு, ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படமானது நடிகர் சிம்புவின் 49வது படமாக உருவாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் படத்தில் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்தது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எனவே படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 6.06 மணி அளவில் வெளியாகும் என நடிகர் சிம்பு தனது சமூக எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே இந்த அப்டேட்டை கொண்டாட ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.