ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

உலக வரலாற்றில் மிகக் கொடூரமான சர்வாதிகாரி யார் என்று கேட்டால் அனைவரும் முதலில் சொல்லும் பெயர் ஹிட்லராக தான் இருக்கும். கொத்து கொத்தாக மனித உயிர்களை வேட்டையாடி மனிதர்களை கொல்வதற்கு என்று புதிய புதிய வழிகளை கண்டறிந்த ஒரு ராட்சசன் ஆகவே ஹிட்லர் அறியப்படுகிறார்.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

யூதர்களை, கம்யூனிஸ்ட்களை தன்பால் ஈர்ப்பாளர்களை என தனக்குப் பிடிக்காத அனைத்து பிரிவு மக்களையும் கொன்று குவித்தவர் ஹிட்லர். தனது போர் வெறியால் உலகையே தனக்கு அடிமையாக்கி விட வேண்டும் என துடித்த ஹிட்லர் இறுதியாக சோவியத் ரஷ்யாவின் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். ஆம் எதிரிகள் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார் ஹிட்லர்.

உலகை இன்று வரை அச்சுறுத்தக்கூடிய சர்வாதிகாரியாக ஹிட்லர் உருவானது எப்படி? ஹிட்லர் செய்த கொடுமைகள் என்னென்ன? மொத்த உலகையும் அடக்கி ஆள நினைத்த ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு சாக என்னென்ன தவறுகள் காரணமாக இருந்தன? ஹிட்லரின் தற்கொலை முடிவுக்கு காரணமான தோல்விகள் என்னென்ன?என விரிவாக விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு

ஐரோப்பிய நாடான ஆஸ்ட்ரியாவில் அலோயிஸ் ஹிட்லருக்கும் கிளாரா தம்பதியின் நான்காவது மகனாக 1889 ஆம் ஆண்டு பிறந்த ஹிட்லர் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகே உடல் நலம் தேற தொடங்கினார்.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

சிறுவயதில் நாவல்களை வாசிக்க தொடங்கிய ஹிட்லருக்கு போர் பற்றிய கதைகள் அதீத ஈர்ப்பை ஏற்படுத்தியது. நான்கு வயதில் தந்தை இறந்துவிட முரட்டுத்தனம் கொண்ட இளைஞராகவே வளர்த்தார். பள்ளி இறுதித் தேர்தல் வெற்றி பெற்ற ஹிட்லர் சான்றிதழை பெற்று திரும்பும் போது மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு சான்றுகளை கிழித்தெறிந்தார். இதனை அறிந்த ஆசிரியர் கண்டித்தபோது இனிமேல் மது குடிக்கவோ சிகரெட் புகைகவோ மாட்டேன் என சத்தியம் செய்தார் ஹிட்லர். வாழ்வில் இறுதிவரை அந்த சத்தியத்தை காப்பாற்றவும் செய்தார்.

19 வயதில் தாயையும் இழந்த ஹிட்லர் குடும்பத்துக்கான உதவிப்பணம் பெறுவதற்காக போலிச் சான்றிதழ் தயாரித்து உதவி படம் பெற்றார். அங்கிருந்துதான் ஹிட்லரின் ஏமாற்று வேலைகள் தொடங்கியது. வருவாய்க்காக ஓவியங்கள் வரைய தொடங்கினார். ஹிட்லரின் ஓவியங்களுக்கு நல்ல விளையும் கிடைத்தது. இதே காலத்தில் சிந்தியா என்ற பெண் மீது ஏற்பட்ட ஹிட்லரின் முதல் காதல் தோல்வியில் முடிந்தது.

 

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

அப்போதுதான் நாளிதழ்களை ஒரு வரி விடாமல் வாசிக்க தொடங்கினார் ஹிட்லர். நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் அவருக்குள் அரசியல் ஆர்வத்தை உருவாக்கியது. ஆஸ்திரியாவில் ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் யூதர்கள் அங்கு முக்கியத்துவம் பெற்றவர்களாக இருந்தனர். யூதர்களின் வாழ்க்கை முறையும் ஐரோப்பிய நாடாளுமன்ற முறையும் அவருக்கு பெரும் வெறுப்பை உண்டாக்கியது.

அனைத்து துன்பங்களுக்கும் அதிகாரத்தின் மேல் மட்டத்திலிருந்து யூதர்களே காரணம் என முழுமையாக நம்பினார். இத்தகைய பின்புலத்தில் ஒரு கட்டத்தில் பிழைப்பு தேடி ஆஸ்திரியாவில் இருந்து ஹிட்லர் ஜெர்மனி வருகிறார். அது முதல் உலகப்போர் தொடங்கிய காலகட்டம் என்பதால் ஜெர்மன் இராணுவத்தில் இணைந்து 1914 முதல் 1918 வரை பணியாற்றினார். போர்க்களத்தில் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை வீரர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை தான் ஹிட்லர் அப்போது செய்தார். போர்க்களத்தில் காயம் எதுவும் இன்றி தப்பித்தாலும் எதிரிகளால் வீசப்பட்ட மஸ்டட் வாயுவால் ஹிட்லரின் கண் பார்வையும், நுரையீரலும் பாதிக்கப்பட்டது.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த போது முதல் உலகப்போரில் ஜெர்மனி சரணடைந்துவிட்டது என்ற தகவல் கிடைத்தது. ஜெர்மனியின் தோல்வியை ஏற்க முடியாத ஹிட்லர் யூதர்களும் கம்யூனிஸ்ட்களும் சதி செய்து ஜெர்மனியை தோற்கடித்து விட்டதாக புலம்பினார். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் பழி தீர்க்க வேண்டும் என்ற வெறுப்பு அவருக்குள் வேரூன்றியது.

மருத்துவமனை சிகிச்சை முடிந்து வெளியே வந்த ஹிட்லர் சில நூறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். இந்தக் கட்சிப் பெயரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பின் சுருக்கம் தான் நாஜி. நாஜி கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதல் முதலாக மேடை ஏறிய ஹிட்லர் தனது ஆக்ரோஷமான பேச்சாற்றலால் பொதுக்கூட்டத்தை முழுமையாக வசீகரித்தார். அடுத்தடுத்த கூட்டங்களில் ஹிட்லரின் பேச்சை கேட்பதற்காகவே மக்கள் கூட தொடங்கினர்.

1919 ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்த ஹிட்லர் இரண்டே ஆண்டுகளில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து கூட்டங்களிலும் ஜெர்மனியர்கள் தலைசிறந்தவர்கள் என்ற பெருமிதத்தையும் யூதர்கள் மீதான வெறுப்புணர்வையும் ஹிட்லர் விதைத்துக் கொண்டே இருந்தார்.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

நாஜி கட்சி அதிவேக வளர்ச்சி பெற தொடங்கியது. சுவஸ்திக் சின்னம் அக்கட்சிக்கு கிடைத்தது. அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக ஹிட்லர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட போது தான் தனது உலகப்புகழ் பெற்ற மெயின் கேம்ப் என்ற புத்தகத்தின் முதல் பகுதியை அவர் எழுதினார்.

1924 ஆம் ஆண்டு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட ஹிட்லர் ஜெர்மனியின் மிக முக்கிய தலைவராக உருவெடுத்தார். 1932 ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்றாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கவில்லை. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் நாஜி கட்சியின் ஆதரவுடன் சுதந்திர கட்சியை சேர்ந்த பால் வான் ஹிண்டன்பர்க் ஜெர்மனியின் அதிபர் ஆனார். ஹிட்லருக்கு பிரதமர் பதவி கிடைத்தது. அதிபரான ஒரு வருடத்திற்குள் ஹிண்டன்பர்க் மரணம் அடைய ஜெர்மனியின் அதிபர் ஆனார் ஹிட்லர்.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

அதிபர், பிரதமர், ராணுவ தளபதி என மூன்று பதவிகளையும் தன்னிடமே வைத்துக்கொண்டு ஜெர்மனியின் சர்வாதிகாரியானார். மொத்த அதிகாரமும் கைக்கு வந்தவுடன் ஹிட்லரின் அட்டூழியங்கள் தொடங்கியது. யூதர்களும், அரசியல் எதிரிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்கூடங்கள் வதை முகாம்களாக மாறின. வதை முகாம்களில் சொல்ல முடியாத கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

மிகக்குறைவான குழாய்கள் தான் அங்கு இருக்கும். அங்கிருந்து ஆயிரக்கணக்கானோரும் அங்கே குளித்தாக வேண்டும். சோப் கிடையாது. துடைத்துக் கொள்ள துண்டு கிடையாது. ஒரு கைகுட்டை கூட இருக்காது. கழிப்பறை என்பது தோண்டப்பட்ட குழிகள் தான். முழுக்க மலம் நிரம்பி வழிந்த பிறகும் சில நூறு பேர் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலையில் ஒரு பகுதியாக கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியையும் கைதிகளே செய்து கொள்ள வேண்டும். சுத்தப்படுத்திக் கொள்ள அழுக்கடைந்த சாக்கடை நீரே வழங்கப்படும். பசியாலும் நோய்களாலும் அவர்கள் சாகவேண்டும் என்பதே நாஜிக்களின் விருப்பமாக இருந்தது.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

இருட்டு அறைகளில் அடைக்கப்பட்டு விஷவாயு செலுத்தப்பட்டு ஆயிரம் ஆயிரமாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். யூதராக பிறந்ததே தண்டனைக்குரிய குற்றமானது. எந்த வசதியும் அற்ற வதை முகாம்களில் அடைக்கப்பட்ட யூதர்கள் சாக வேண்டும் என்பதே நாஜிக்களின் விருப்பமாக இருந்தது.

யூதர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு எதிராக ஜெர்மனியர்கள் எதுவும் பேசவில்லை. யூதர்கள் இல்லாமல் போவது தங்களுக்கு நன்மை அளிக்கும் என அவர்கள் நம்பினார். இன்னும் சொல்லப்போனால் பல ஆண்டுகாலமாக யூதர்களை என்ன செய்ய வேண்டும் என ஜெர்மானியர்கள் விரும்பினார்களோ அதை ஹிட்லர் செய்து கொண்டிருந்தார். யூதர்கள் மேல் வெறுப்பு இருந்தால் ஹிட்லரின்   நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத வெகுசில ஜெர்மானியர்களும் அமைதி காத்தனர்.

அதற்கு ஒரே காரணம்தான் அமைதியாக இருப்பதை தவிர அவர்களால் வேறு எதுவும் செய்து விட முடியவில்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முதல் உலகப்போரில் ஜெர்மனியும் தோல்விக்கு காரணமான நாடுகளை ஹிட்லர் பழிவாங்க துடித்தார். உலகின் மிகச்சிறந்த படைகளாக ஜெர்மனியின் ராணுவமும், கடற்படையும், விமானப்படையும் உருமாறினார்.

எந்த முன்னறிவிப்புமின்றி 1939 ஆம் ஆண்டு போலந்து நாட்டிற்கு எதிரான போரை தொடங்கினார் ஹிட்லர். இரண்டே வாரங்களில் போலந்து ஹிட்லர் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹிட்லரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரோடு கரம் கொடுத்தார் இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினி.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

இவர்களோடு ஜப்பானும் இணைந்து கொண்டது. ஜெர்மனியும் இத்தாலியும் ஜப்பானும் இணைந்து உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டம் தீட்டினார். ஆசியாவை ஜப்பானும் ஆப்பிரிக்காவை இத்தாலியும் ஐரோப்பாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது.

ஹிட்லரின் நடவடிக்கைகளுக்கு நாஜி கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்புகளும் கிளம்பின. ஒருமுறை ஹிட்லர் அலுவலகத்தில் இருந்தபோது குண்டு ஒன்று வெடித்தது. இது தொடர்பாக 5000 பேர் கைது செய்யப்பட்டு 5000 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 5000 பேருக்கு தூக்கு மேடைக்கு எங்கே செல்வது என யோசித்தபோது தெருவிளக்கு கம்பங்களும், மரங்களும் தூக்கு மேடைகளாகின. 5000 பேரில் ஒருவரான ஹிட்லரின் தளபதி ரோம்மெல் மீது மட்டும் ஹிட்லருக்கு இரக்கம் பிறந்தது. சதியில் ஈடுபட்டிருந்தாலும் முன்பு தனக்காக உழைத்ததை நினைவுகூர்ந்து ஹிட்லர் தூக்கிலிடுவதற்கு பதிலாக விஷமருந்தி சாக அவரை அனுமதித்தார். அந்த அளவுக்கு கொடூரமான ஹிட்லரிடம் சில முக்கிய குணங்களும் இருந்தன.

சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வரம்பு மீறி செல்லும். ஆனால் ஹிட்லரின் சர்வாதிகாரத்தில் பெண்களுக்கு எதிரான அத்துமீறர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. பாலியல் தொழிலுக்கும் ஹிட்லரின் ஆட்சியில் இடமில்லை. அதுமட்டுமின்றி ஜெர்மனியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டதும் ஹிட்லரின் ஆட்சியில் தான்.

ஜெர்மனியில் வேலையின்மை பிரச்சனைக்கு முடிவு கட்டினார். ஒரு சில நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் ஹிட்லரின் போர்வெறியும் மனித உரிமை மீறல்களும் இப்போதும் நடுங்க வைக்க கூடியதாகவே உள்ளன.

ஹிட்லரின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலத்தில் 1939 ஆம் ஆண்டு போலாந்து நாட்டின் மீது போர் தொடுத்தது ஜெர்மனியின் நாஜி படைகள். போலந்தின் மீதான தாக்குதலை கண்டித்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஜெர்மனிக்கு எதிரான போரை அறிவித்தனர். அப்போது ஜெர்மனிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது சோவியத் ரஷ்யா. இதையொட்டி உலக நாடுகள் இடையே அணி செயற்கைகள் ஆரம்பமாக இரண்டாம் உலகப்போரை தொடக்கி வைத்தது ஹிட்லரின் ஜெர்மனி. மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளை ஜெர்மனி கைப்பற்றியது. போலந்து, ஆஸ்ட்ரியா, செக்கோஸ்லோவாக்கிய, நார்வே, டென்மார்க், பெல்ஜியம், கிரேக்கம் என ஜெர்மன் படைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தன.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

தொடர்ந்து கிடைத்த வெற்றிகள் தான் யாராலும் வெல்லப்பட முடியாதவன் என்ற மமதையை ஹிட்லருக்கு உண்டாக்கியது. மமதை கொடுத்த துணிச்சலோடு ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வலுவோடு நின்ற சோவியத் ரஷ்யா மீது படையெடுத்து மாஸ்கோவை கைப்பற்ற திட்டமிட்டார்.

பல சிறிய நாடுகளை வென்று கொண்டிருந்த ஹிட்லரின் நாஜி படைகளை சோவியத் ரஷ்யாவின் வீரர்கள் திணறடித்தனர். ஹிட்லரின் படைகள் பின்வாங்கி ஓட்டம் எடுத்தன. போரில் இரண்டு லட்சம் ஜெர்மன் வீரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டரை லட்சம் ஜெர்மனிய வீரர்களை சிறைபிடித்தது சோவியத் ரஷ்யா. இறுதியாக ஹிட்லரின் மாளிகையை சோவியத் படைகள் சுற்றி வளைத்தனர். உலகத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என துடித்த ஹிட்லர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கு குழிக்குள் ஒடினார்.

தப்பிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது 1945 ஏப்ரல் 30ஆம் தேதி தனது காதலித்து சைனைட் கொடுத்துவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஹிட்லர் செத்துப் போனார்.

 

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

இப்படி ஒரு பின்னடைவை ஹிட்லர் சந்தித்ததற்கு என்ன காரணம்? அவர் என்னவெல்லாம் தவறுகளை செய்தார்? என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. மிக முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடன் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருந்த சோவியத் ரஷ்யா மீது போர் தொடுக்க தன்னிச்சையாக முடிவெடுத்ததே ஹிட்லரின் முடிவுக்கு முதன்மையான காரணமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த சோவியத் ரஷ்யா மீது எந்த நாட்டின் ஆதரவும் உதவியும் இல்லாமல் ஜெர்மனி படையெடுத்தது. சோவியத் மீது போர் தொடுக்கும்போது இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நட்பு நாடாக இருந்த ஜப்பானை கூட தன்னோடு ஹிட்லர் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஒருவேளை ஹிட்லரின் படைகளோடு ஜப்பான் படைகளும் இணைந்து இருந்தால் அது சோவியத் ரஷ்யாவிற்கு கூடுதல் சவாலாக இருந்திருக்கும். மேற்கு பகுதியிலிருந்து முன்னேறி வரும் ஜெர்மன் வீரர்களையும் கிழக்குப் பகுதியில் இருந்து முன்னேறி வரும் ஜப்பான் வீரர்களையும் ஒரே நேரத்தில் எதிர் கொள்ள வேண்டிய நெருக்கடி சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருக்கும்.

அந்த மிக முக்கியமான வாய்ப்பை தவற விட்டுவிட்டு தனது படைகளை மட்டுமே நம்பி பலம் வாய்ந்த சோவியத்திற்குள் நுழைந்தது தான் ஹிட்லர் செய்த மிகப்பெரிய தவறு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

அதே வேளையில் ஹிட்லரின் மற்றொரு முக்கிய கூட்டாளியான இத்தாலி சர்வாதிகாரியான முசோலினியும் போரில் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்தார்.

இதேபோல் சோவியத் ரஷ்யா ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உக்ரைன் மீதான ஹிட்லரின் படையெடுப்பும் விமர்சனத்திற்கு உள்ளானது. சோவியத் ரஷ்யா மீது அதிருப்தியில் இருந்த உக்ரேனியர்களை தன்னோடு இணைத்து கொள்வதற்கு பதிலாக உக்கிரேனியர்கள் மீதே தாக்குதல் நடத்தினார்.

யாரையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றி எல்லாம் யோசிக்காமல் காணும் நாடுகள் மீதெல்லாம் படை எடுப்பது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என போர்வெறியில் மிகுந்த ஹிட்லரின் நடவடிக்கையால் ஜெர்மனியின் எதிரிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

மற்றவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்ளாதது மட்டுமல்ல தனது படைகள் மீது அபரிமிதமான நெருக்கடிகளை திணித்ததும் ஹிட்லரின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணமானது. இரண்டாம் உலகப்போர் தொடங்கியது முதலே ஜெர்மன் படை வீரர்களுக்கு ஓய்வழிக்கப்படவில்லை. போரில் உயிரிழந்தவர்களை தவிர அனைத்து வீரர்களும் தொடர்ச்சியாக போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

இது ஹிட்லரின் படை வீரர்களுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தியது. உறங்கும் நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அவர்கள் போர்க்களத்திலேயே இருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மேலும் மேலும் ஜெர்மனியின் படைகள் சோறுபடைந்து கொண்டே இருந்தனர். ஆனால் அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்து எந்த நாட்டின் மீது போர் தொடுப்பது என்ற சிந்தனையிலேயே ஹிட்லர் நேரத்தை வீணடித்தார்.

ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய படுகொலைகளும்  போர்க்களத்தில் ஹிட்லருக்கு எதிராக திரும்பினார். அளவுக்கு அதிகமான சர்வாதிகாரத்தால் யூதர்கள் மட்டுமின்றி ஜெர்மனியர்களில் குறிப்பிடத்தக்க அளவு மக்களும் ஹிட்லருக்கு எதிரான மனநிலைக்கு வந்திருந்தனர்.

போர்க்களத்தில் துணை நின்று இருக்க வேண்டிய சொந்த நாட்டு மக்களே ஹிட்லரின் சர்வாதிகார நடவடிக்கைகளால் அவருக்கு எதிராக திரும்பி இருந்தனர். சொந்த நாட்டுக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு ஹிட்லருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் பின்னடைவுக்கும் காரணமானது.

சோவியத் ரஷ்யா மீது படையெடுப்பதற்கு முன் கால சூழலையும் ஹிட்லர் கருத்தில் கொள்ளவில்லை. கடும் குளிர் காலத்தில் தான் சோவியத் ரஷ்யாவுக்குள் ஜெர்மன் படைகள் நுழைந்தன. படை வீரர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் போதிய தயாரிப்புகள் இல்லாமல் சென்றது மட்டுமல்லாமல் கடும் குளிரை சமாளிப்பதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படவில்லை. இத்தகைய காரணிகள் ஹிட்லரின் நாஜி படைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

ஒரு பக்கம் சோவியத் ரஷ்யா மீது போர் தொடுப்பது மற்றொருபுறம் அமெரிக்கா மீது போர் அறிவிப்பை  வெளியிட்டது என எல்லோரையும் எதிரிகள் ஆக்கிக் கொண்டே சென்றார். வலிமையான படை வீரர்களுடன் ராணுவ வல்லரசாக வளர்ந்து கொண்டிருந்த சோவியத் ரஷ்யாவும் எதிரி பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் வல்லரசாக இருந்த அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் எதிரி என எந்த ஆதாரமும் இல்லாமல் தனித்து நின்றார் ஹிட்லர் .

ஒருவேளை அமெரிக்கா ஆதரவு நிலைப்பாட்டை ஹிட்லர் எடுத்து இருந்தால் சோவியத்துக்கு எதிரான போரில் மேலும் கொஞ்ச காலம் ஜெர்மானிய படைகளால் தாக்குப்பிடித்திருக்க முடியும். இதே போல் போர் நடைபெற்ற காலகட்டத்தில் ஹிட்லர் மேற்கொண்ட குழப்பமான முடிவுகளும் பின்னடைவுக்கு காரணமாகியது.

தோல்வி தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்த ஜெர்மன் உயரதிகாரிகள் பல ஒரு கட்டத்தில் ஹிட்லர் தலைமையின் கீழ் தொடர்வது நாட்டின் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற மனநிலைக்கு சென்றனர். ஐக்கிய நாடுகளின் போர் குற்ற ஆணையத்தின் முதல் போர் குற்றவாளிகள் பட்டியலில் ஹிட்லர் பெயர் சேர்க்கப்பட்டது.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

இறுதியாக சோவியத் ரஷ்யாவின் செம்படைகளும் மேற்கத்திய நட்பு நாடுகளின் படைகளும் ஜெர்மனை நோக்கி முன்னேறினார். படையெடுத்து வருபவர்களின் பலத்தை அறிந்திருந்த போதும் கூட சரணடைய மனமின்றி தொடர்ந்து எதிர்க் தாக்குதல்களை தீவிர படுத்தவே உத்தரவிட்டார்.

ஜெர்மனியை சுற்றி வளைக்கும் நாடுகளை மேலும் ஆத்திரப்படுத்துவதாகவே ஹிட்லரின் தொடர் செயல்பாடுகள் அமைந்திருந்தது. ஜெர்மனிக்கு பெரும் பகுதி போரால் பாதிக்கப்பட்ட பிறகும் போரில் வெற்றி பெறுவோம் என வானொலி வாயிலாக நம்பிக்கை தெரிவித்துக் கொண்டே இருந்தார் ஹிட்லர்.

இது ஒரு வகையில் அவரிடம் ஏற்பட்டு விட்ட அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே அனைவரும் பார்த்தனர். தோல்வியை ஒரு கட்டத்தில் மனதுக்குள் ஏற்றுக்கொண்ட ஹிட்லர் ஜெர்மனியின் தொழில்துறை உள் கட்டமைப்புகள் அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டார்.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

வேறு வழியின்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் சமாதான பேச்சு வார்த்தையை தொடங்கலாம் என முடிவெடுத்தார் ஹிட்லர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மரணம் ஹிட்லருக்கு இந்த நம்பிக்கையை அளித்தது. ஆனால் ஹிட்லரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

நேச நாடுகள் ஜெர்மனிக்கு எதிராக போரிடுவதில் உறுதியோடு இருந்தன. எல்லாம் சேர்ந்து ஹிட்லருக்கு தன்மீதே ஒரு வித வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. உண்மையில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் ஹிட்லர். 1945 ஏப்ரல் 28ஆம் தேதி இரவில் ஹிட்லர் தனது காதலி ஈவா பிரவுனை மணம் முடித்தார்.  இதற்கிடையே இத்தாலியை எதிர்த்து இயக்கத்தினரால் தனது நண்பரான முசோலினி தூக்கிலிடப்பட்ட செய்தி ஹிட்லருக்கு கிடைத்தது. இதனால் எதிரிகளிடம் தான் பிடிப்பட்டு விடக்கூடாது என உறுதியான முடிவை எடுத்தார் ஹிட்லர். தனது மனைவி ஈவா பிரவுனுக்கு சைனைட் கொப்பியை கடித்து கொடுத்த ஹிட்லர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார்.

ஹிட்லரின் தோல்விகள் சர்வாதிகாரிகளுக்கு பாடம்

தனது உடல் எதிரிகளிடம் கிடைத்து விடக்கூடாது என ஹிட்லர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததால் ஹிட்லர் மற்றும் ஈவாவின் உடல்களை படை வீரர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கினார். ஹிட்லரை விமர்சித்து அவர் வாழ்ந்த காலத்திலேயே தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார் சார்லி சாப்ளின். அத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் காற்று நிரப்பப்பட்ட பூமி பந்தை எட்டி உதைத்து விளையாடுவார் ஹிட்லராக நடித்திருந்த சார்லி சாப்ளின்.

அவர் விரும்பிய பக்கமெல்லாம் காற்று நிரப்பப்பட்ட பூமிப்பந்து பலூன் பறந்து கொண்டே இருக்கும். அவர் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த பூமிப்பந்து வெடித்து சிதறிவிடும். அதேபோலவே பூமிப் பந்தை ஒரு பலூன் போல தனது விளையாட்டு பொருளாக மாற்ற நினைத்த சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையும் கடைசியில் ஒன்றுமில்லாமல் போனது.

https://www.mugavari.in/news/politics/bjps-popularity-plummets-india-thanks-ed/373

சிறு வயது முதலே மனதில் உருவான இனவெறியை வளர்த்தெடுத்து அதிகாரம் கைக்கு கிடைத்த பிறகு எதிரிகளாக தான் கருதி அனைவரையும் சித்திரவதை செய்து கொன்று தான் மட்டுமே உலகை ஆளப் பிறந்தவன் இந்த மமதையில் வாழ்ந்து மடிந்த ஹிட்லரின் வாழ்வு இன்றைக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. ஆணவத்தின் உச்சத்தில் நின்று கொண்டு தன்னிலை மறந்து அதிகார போதையில் மக்களுக்கு எதிராக செயல்படுவோரின் முடிவு எப்படி அமையும் என்பதற்கு இப்போது வரை ஹிட்லரின் மரணம் சாட்சியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:22
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img