சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 46வது போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது முதலாவது இடத்திலுள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலுள்ளது.

 

இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 முறையும் ஐதராபாத் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் கடந்த 18வது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாடும் அஜிங்கியா ரஹானேவும் களமிறங்கவுள்ளனர்.

 

Raj

Recent Posts

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில் நள்ளிரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான…

அக்டோபர் 18, 2024 11:20 காலை

எமர்ஜென்சி’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்த – மகிழ்ச்சியில் கங்கனா.

நடிகை மற்றும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக…

அக்டோபர் 18, 2024 11:06 காலை

நடிகை தமன்னாவிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை.

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர…

அக்டோபர் 18, 2024 10:45 காலை

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு.

ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் DJ இசைக்கு நடனமாடிய…

அக்டோபர் 18, 2024 10:23 காலை

ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு…

அக்டோபர் 17, 2024 6:08 மணி

செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் -நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில், செல்போனை பார்த்து கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியது…

அக்டோபர் 17, 2024 5:59 மணி