டெல்லி அணி அபார பேட்டிங் – மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு!

 

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 43வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மெக்ரூர் 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அதிரடி காட்டி அவுட்டானார். அடுத்த வந்த அபிஷேக் போரெல் 36 ரன்களும் ஷாய் ஹோப் 41 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்களும், திரிஷ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 11 ரன்களும் எடுத்தனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.

Raj

Share
Published by
Raj

Recent Posts

நடிகை தமன்னாவிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை.

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர…

அக்டோபர் 18, 2024 10:45 காலை

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு.

ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் DJ இசைக்கு நடனமாடிய…

அக்டோபர் 18, 2024 10:23 காலை

ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு…

அக்டோபர் 17, 2024 6:08 மணி

செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் -நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில், செல்போனை பார்த்து கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியது…

அக்டோபர் 17, 2024 5:59 மணி

ரயில்வே கால்வாயில் விழுந்த பசுமாட்டை : போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர்.…

அக்டோபர் 17, 2024 5:50 மணி

பிரக்ஞானந்தா தனது செஸ் : வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை வென்றாா்.

WR செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்துள்ளார் பிரக்ஞானந்தா. லண்டனில் நடந்த 2024 WR செஸ் மாஸ்டர்ஸ்…

அக்டோபர் 17, 2024 5:41 மணி