ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 29 ரன்களிலும், மிட்செல் மார்ஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சாய் ஹோப் 33 ரன்களைச் சேர்க்க அபிஷேக் பரோல் 10 பந்துகளில் 32 ரன்களை விளாசினார்.
இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்த 174 ரன்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணி சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் அக்சர் படேலும், ஹர்தீப் சிங்கும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
சாம் கரண் 63 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டோன் 38 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். ஆட்டநாயகன் விருதை சாம் கரண் வென்றார்.