ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாச்சத்தில் வெற்றி பெற்றது.
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. இறுதியாக குஜராத் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். இதேபோல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்ட டேவிட் மில்லர் 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் குஜராத் அணி நடப்பு சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…