ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுச் செய்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ரச்சின் 30 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே சிக்ஸர்களாக பறக்கவிட்டு அரைசதம் அடித்தார்.
அறிமுக வீரராக களமிறங்கிய சமீர் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்கவிட்டு மேலும் உற்சாகப்படுத்தினார். 6 பந்துகளை எதிர்கொண்ட சமீர் 14 ரன்களை சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது.
சசிகலா புஷ்பா சர்ச்சை வீடியோ…..பா.ஜ.க. வேட்பாளர் விளக்கம்!
இமாலய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்களும் சென்னை அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 பந்துகளில் 37 பந்துகளை சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அரைச்சதம் அடித்த ஷிவம் துபே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…