விளையாட்டு

டெல்லி அணிக்கு 273 ரன்கள்… இமாலய இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 272 ரன்கள் குவித்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 16வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இரண்டு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 16வது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியையும் வீழ்த்தியது. டெல்லி அணியை பொறுத்தவரை முதல் இரு ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்து நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 16 முறையும் டெல்லி அணியும் 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் அய்யர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி பந்து வீச உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 18 ரன்னிலும் சுனில் நரேன் 85 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 54 ரன்னிலும் ரஸ்செல் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சுனில் நரேன் 85 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 272 ரன்கள் குவித்தது. பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடவுள்ளது.

Raj

Recent Posts

நடிகை தமன்னாவிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை.

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர…

அக்டோபர் 18, 2024 10:45 காலை

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு.

ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் DJ இசைக்கு நடனமாடிய…

அக்டோபர் 18, 2024 10:23 காலை

ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு…

அக்டோபர் 17, 2024 6:08 மணி

செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் -நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில், செல்போனை பார்த்து கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியது…

அக்டோபர் 17, 2024 5:59 மணி

ரயில்வே கால்வாயில் விழுந்த பசுமாட்டை : போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர்.…

அக்டோபர் 17, 2024 5:50 மணி

பிரக்ஞானந்தா தனது செஸ் : வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை வென்றாா்.

WR செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்துள்ளார் பிரக்ஞானந்தா. லண்டனில் நடந்த 2024 WR செஸ் மாஸ்டர்ஸ்…

அக்டோபர் 17, 2024 5:41 மணி