கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 36வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 36வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலுள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 1 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 19 முறையும் பெங்களூரு அணி 14 முறையும் முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்த பெங்களூரு அணி இந்த போட்டிகளில் எழுச்சி பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரம் கடந்த போட்டியில் தோல்வியடைந்த கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேனும் பில் சால்ட்டும் களமிறங்கவுள்ளனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…