விளையாட்டு

சுனில் நரேன் அபார சதம்….ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 31வது லீக் போட்டி நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 10 ரன்னிலும் சுனில் நரேன் அபாரமாக விளையாடி சதம் விளாசி 109 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 30 ரன்னிலும் ஸ்ரேயர்ஸ் அய்யர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்வி ஜெய்ஸ்வாலும் ஜாஸ் பட்லரும் களமிறங்கவுள்ளனர்.

Raj

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி