லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 235 ரன்கள் குவித்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 54வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெற்றது. லக்னோவில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 54வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 32 ரன்களிலும் சுனில் நரேன் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 32 ரன்களிலும் ஆந்தரே ரஸ்செல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…