கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 54வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெறுகிறது. லக்னோவில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 54வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 6 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலுள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7 வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி 3 முறையும் அணி கொல்கத்தா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 28வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியடைந்த லக்னோ அணி தற்போது அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியானது தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேனும் பில் சால்ட்டும் களமிறங்கவுள்ளனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…