மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 47 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 48வது லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 48வது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 4 ரன்களிலும் இஷான் கிஷான் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் திலக் வர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக நெஹால் வதேரா 46 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது.

பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் லக்னோ அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி ரன் ஏதுமின்றியும் கேஎல் ராகுல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 62 ரன்களிலும் தீபக் கூடா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணியின் ஆட்டநாயகனாக மார்கஸ் ஸ்டோனிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

Raj

Recent Posts

‘மரகத நாணயம் 2’ படத்தில் இணையும் நடிகர் சத்யராஜ்!

மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர்…

அக்டோபர் 23, 2024 5:32 மணி

அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது – துல்கர் சல்மான் பேச்சு!

  நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் அவரைப் போல யாரும் இருக்க முடியாது என்றும் நடிகர் துல்கர்…

அக்டோபர் 23, 2024 4:47 மணி

பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்.

முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பான…

அக்டோபர் 23, 2024 4:17 மணி

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை…

அக்டோபர் 23, 2024 3:40 மணி

மாதவன் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா சாவ்லா என்ன படம் தெரியுமா?

நடிகை பூமிகா சாவ்லா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர்…

அக்டோபர் 23, 2024 2:53 மணி

திருமணமான ஆறே மாதத்தில் பெண் தற்கொலை – ஆடியோ பதிவில் கூறியது என்ன ?

குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.…

அக்டோபர் 23, 2024 2:34 மணி