லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதலாவது (அதாவது 43வது லீக்) போட்டியில் டெல்லிvsமும்பை அணிகள் மோதின. லக்னோ மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் (அதாவது 44வது லீக்) இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது முதலாவது இடத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7 வெற்றி 1 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 3 முறையும் லக்னோ அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் கடந்த 4வது லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது லக்னோ அணி அதற்கு பதிலடி கொடுக்குமா ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து லக்னோ அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுலும் குயிண்டன் டிகாக்கும் களமிறங்கவுள்ளனர்.