ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 54 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 55வது லீக் போட்டி நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 55வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 48 ரன்களிலும் அபிஷேக் ஷர்மா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் 5 ரன்களிலும் நிதிஷ்குமார் ரெட்டி 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய பேட் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 9 ரன்களிலும் ரோகித் சர்மா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரன் ஏதுமின்றி வெளியேறினார். கடைசியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு வித்திட்டார். இறுதியில் அணியானது 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.