மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 13 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 14வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்துமுடிந்த போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணி இதுவரை ஒரு வெற்றி கூட பெறவில்லை. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ள மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை முதலாவது பேட்டிங் விளையாட உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷானும் ரோகித் சர்மா களமிறங்கவுள்ளனர்.